வறுமையில் வாடும் கூலி தொழிலாளர்கள் 500பேருக்கு வாணியம்பாடி வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர்
கலந்து கொண்டு துவங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அதிகமாக தோல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஏழைக் கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
கரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 44 நாட்களாக ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருக்கும் நிலையில் வருமானமின்றி ஏழை கூலித் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர் இதற்காக பல்வேறு சமூக அமைப்புகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்
இதனைத் தொடர்ந்து இன்று வாணியம்பாடி வணிகர் சங்கங்களின் சார்பில் அரிசி பருப்பு சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையினை பொதுமக்கள் 500 பேருக்கு பகுதி வாரியாக விநியோகிக்கும் பணியை வணிகர் சங்க நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர் .
மாவட்ட ஆட்சியர் சிவனருள் இந்நிகழ்வில் பங்கேற்று ஏழைக் கூலித் தொழிலாளர்களுக்கு அரிசி மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையினை வழங்கி இந்நிகழ்வினை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து வாணியம்பாடி வட்டாட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோருடன் இணைந்து வணிகர் சங்க நிர்வாகிகள் வாணியம்பாடி நகரில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஏழை எளிய மக்களுக்கு இந்தத் தொகுப்பு பையினை வினியோகித்து வருகின்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் வணிகர் சங்க்தின் சார்பில் வாணியம்பாடி வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக 500 பயனீட்டாளர்களுக்கு
மாநில துணை தலைவர் சி.ஸ்ரீதரன் மாவட்ட தலைவர் C. கிருஷ்ணன் மாவட்ட செயலாளர் KBS மாதேஸ்வரன் மாவட்ட பொருளாளர் AGS செந்தில் முருகன் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் S.அருண் குமார் மாவட்ட செய்தி தொடர்பாளர் A. பத்ம நாபன் மாவட்ட துணை தலைவர் B. செல்வமணி
O.A. சித்திக் அஹ்மத் பொருளாளர் K.வெங்கட்ரமணன் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி.சரவணன்- அரவிந்தன்...