வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே.... ஆடைகட்டி வந்த நிலவோ  செந்தமிழ் தேன் மொழியாள்   போன்ற தேனிசை பாடல்களை பாடி நடித்த புகழ்பெற்ற திரைப்பட  நாடக நடிகர் டி.ஆர்.மாகாலிங்கம் நினைவு தினம் இன்று..

 


வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே....
ஆடைகட்டி வந்த நிலவோ  செந்தமிழ் தேன் மொழியாள்   போன்ற தேனிசை பாடல்களை பாடி நடித்த புகழ்பெற்ற திரைப்பட  நாடக நடிகர் டி.ஆர்.மாகாலிங்கம் நினைவு தினம் இன்று..


ஏப்ரல் 21 , 1923 மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்துள்ள தென்கரை என்ற ஊரில் பிறந்த டி.ஆர். மகாலிங்கம் ஐந்து வயதில் இருந்தே மேடையேறி நாடகங்களில் நடிக்கவும், பாடவும் செய்தார்.


அவர் ஒரு நாடகத்தில் நடித்தபோது அவரின் பாட்டில் மெய்சிலிர்த்துப் போன ஏ. வி. மெய்யப்ப செட்டியார் தனது படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார்.


1937ல் ஏ.வி.எம்.-ன் பிரகதி பிக்சர்ஸ் நிறுவனத்தின் நந்தகுமார் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.


அதன் பின்பு பிரகலாதா, சதிமுரளி, வாமன அவதாரம், பரசுராமர் போன்ற படங்களில் பாடி நடித்துப் புகழ் பெற்றார்.


திரைப்படங்களில் நடித்தாலும் நாடகங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.


ஸ்ரீவள்ளி படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தில் அவர் முருகனாக நடித்திருந்தார்.
திரைப்படத்துறையில் நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு இப்படம் பெரிதும் காரணமாய் அமைந்தது.


இவருடைய வாழ்க்கையில் மிக செல்வத்தின் உச்சத்தையும், அதன் அடிமட்டத்தையும் தொட்டுப் பார்த்தவர் இவர்.


காலத்தின் கோலம் இவர் திரைத் துறை வாழ்க்கையை விட்டு மீண்டும் தன் சொந்த ஊருக்குச் செல்லும் நிலைமை வந்தது.


பிறகு ஏ.பி.நாகராஜன் திருவிளையாடலில் கொடுத்த வாய்ப்பைத் தொடர்ந்து மீண்டும் திரையில் இவர் இசை ஒலிக்கத் தொடங்கியது.


*இவ்வாறு பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான டி.ஆர். மகாலிங்கம் 1978 ஏப்ரல் 21 இதே நாளில்  மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


தமிழ் சுடரில் வரும் வரலாறு சுடரை பாருங்கள்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image