கொரோனா நிதியாக 300 அரிசி மூட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய அரிசி ஆலை உரிமையாளர்கள்...
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொரோனா நிவாரணத்திற்க்கு கருங்குழி அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் டி.வி. ராம மூர்த்தி தலைமையில் 10 கிலோ அளவில் உள்ள 300 அரசி மூட்டைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.ஜான் லூயிஸிடம் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கா.பிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.கண்ணன், மாவட்ட ஆட்சியர் நேர் முக உதவியாளர் விஜயகுமாரி , அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஜா.விஸ்வநாதன், எஸ். குமார், வி. கமலகண்ணன், இ.கன்னியப்பன், வி.ஆர் பாலசந்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- உத்தமன்...