30 ஆயிரம் பட்டாசு தொழிலாளர்களுக்கு
நிவாரணம் வழங்கும் பணிகளை
தொடக்கி அமைச்சர் வைத்தார் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி
சிவகாசியில் 30 ஆயிரம் பட்டாசு தொழிலாளர்களுக்கு தலா 10 கிலோ வீதம் அரிசியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதிலும் ஊரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனனர். சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலைகள் இயங்காததால் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி சிரமப்படுகின்றனர். இந்நிலையில் சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் இந்திய பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக 30 ஆயிரம் பட்டாசு தொழிலாளர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட எஸ்.பி., பெருமாள் முன்னிலை வகித்தாார். பட்டாசு தொழிலாளர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உணவு பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்காக லாரிகளில் அரிசி பைகள் மொத்தமாக சிவகாசி ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. தொழிலாளர்களை அலைய வைக்காமல் நேரிடையாக அவர்களின் வீடுகளுக்கே அரிசியை கொண்டு சேர்க்கும் வகையில் பட்டாசு ஆலை வாகனங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. சப் கலெக்டர் தினேஷ்குமார், தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் கணேசன்பஞ்சுராஜன், இந்திய பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் செயலாளர் கண்ணன், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஆசைதம்பி, மகேஸ்வரன், ராஜரத்தினம், செல்வராஜன், அபிரூபன், சங்கர், ஜெயராஜ், செல்வசண்முகம், பாஸ்கரராஜன், சீனிவாசன், திருமலைராஜன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பலராமன், சுப்பிரமணியன், கருப்பசாமி, நகர செயலாளர்கள் பொன்சக்திவேல், அசன்பதூரூதீன், பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ், ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிநாராயணன், டி.எஸ்.பி., பிரபாகரன், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாசலபதி, கண்ணன், ராஜா கலந்து கொண்டனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
தமிழ் சுடர் ஆன்லைனில்...