ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரண்...
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பகவதி அம்மன் கோயில் வசிக்கும் ஜோதிமணியின் மகன் சந்திரமோகன் (38) இவர் பிரபல ரவுடி பல கொலை வழக்குகளில், கொலை முயற்சி வழக்குகளும் இவர் மீது உள்ளது. இவர் கடந்த சில வருடங்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பால்வியாபாரியின் தலையை துண்டித்து எடுத்துக் கொண்டு சென்று விட்டதால் இவரை இப்பகுதி மக்கள் தலைவெட்டி சந்திரமோகன் என்று அழைத்து வந்தனர். இவருக்கு இப்பகுதியில் முன்விரோதம் அதிகம் இருந்து வந்தது .இந்நிலையில் இன்று காலை ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஸ்ரீரங்கம் ரயில்வே டிரைனேஜ் தெருவில் வசிக்கும் அண்ணன் தம்பிகள்
சுரேஷ் (35) சரவணன் (30) இவர்கள் இருவரும் மற்றொருவர் செல்வகுமார் (25) 3 பேரும் காரில் வந்து ஸ்ரீரங்கம் ரயில்வே பாலத்தில் வழி மறித்து
ரவுடி சந்திரமோகன்
தலையை துண்டித்தனர். பின்னர் அதே காரில் தலையுடன் ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் மூன்று பேரும் சரணடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை கைப்பறறி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்ப வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
தமிழ் சுடர் காலை நாளிதழ்...