வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே.. இன்று கமலாதேவி சட்டோபாத்யாய் பிறந்த தினம்..

 


வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..
இன்று கமலாதேவி சட்டோபாத்யாய் பிறந்த தினம்..


கமலாதேவி சட்டோபாத்யாய் கர்நாடக மாநிலம்   மங்களூரில் அவரது பெற்றோருக்கு நான்காவது மகளாகப் பிறந்தார்.


இவரின் தந்தை ஆனந்தையா தரேஸ்வர் மாவட்ட ஆட்சியராக மங்களூரில் இருந்தார், இவரின் தாயார் கிரிஜாபாய்.


கமலாதேவி சட்டோபாத்யாய் ஒரு சமூக சீர்திருத்தவாதி, மற்றும் பெண்ணியவாதி. விதவையான பின்னர் மறு மணம் செய்துகொண்டு புரட்சி செய்தவர்.


இவர் இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றவர்.


மேலும் இந்திய கைவினைப் பொருள்கள், கைத்தறி வளர்ச்சி, சுதந்திர இந்தியாவில் நாடக மறுமலர்ச்சி ஆகியவற்றிற்கு உந்து சக்தியாக இருந்தார்.


கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடியாகவும், இந்திய பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக உழைத்தவர்.


சங்கீத நாடக அகாதெமியின் துணைத்தலைவர், பாரதிய நாட்டிய சங்கத்தின் தலைவர், அகில இந்திய கைவினைஞர்கள் வாரியத் தலைவர், யுனெஸ்கோவின் உறுப்பினர் எனப் பல பதவிகளை வகித்து சிறப்பாகப் பணியாற்றியவர்.


இவர் ஆற்றிய பணிகளை அங்கீகரிக்கும் விதமாக அரசின் பத்ம பூசன் விருதை 1987லிலும், ராமன் மகசேசே விருதை 1966லும் பெற்றார்.


*மேலும் சங்கீத் நாடக அகாடமி விருது , இசை, நடனம், நாடகம் ஆகியவற்றுக்காக இந்தியாவின் தேசிய அகாடமி, 1974 இல் வாழ்நாள் சாதனைக்கான விருதினையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


வரலாறு சுடரில்....


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image