ஆம்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.21 ஆயிரம் உண்டியல் சேமிப்பு பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய பள்ளி சிறுமிகள் ..
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக அரசுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க பொதுமக்கள், அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அனைவரும் என நிவாரணம் வழங்கலாம் என அறிவித்து இருந்தார். அதன் பேரில் தமிழகத்தில் பல பள்ளி சிறுவர்கள் உட்பட பலரும் நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்
பகுதியில் வசித்து வருபவர் தொழிலதிபர் லக்ஸ்மி சந்த் இவரது பேத்திகள் தியா , ஹர்னா, டியாரா உள்ளிட்ட 3 பேரும் வாணியம்பாடி பகுதியில் உள்ள தக்சிலா என்ற தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். தமிழக முதல்வர் அறிவித்த அறிவிப்பை தொலைக்காட்சியிலும் மற்றும் செய்தித்தாளில் பார்த்த இந்த மூன்று சகோதரிகளுக்கும் அரசுக்கு நாமும் தங்களால் இயன்ற உதவியை செய்யும் வகையில் தாங்கள் சேமிப்புக்காக உண்டியலில் சேர்த்து வைத்திருந்த ரூ. .21 ஆயிரம் பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக கொடுக்க முடிவு எடுத்து அதற்காக ஆம்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மாவட்ட ஆட்சியர் சிவன் அருளிடம் கொரோனா தடுப்பு பணிக்காக தங்கள் உண்டியல் பணத்தை வழங்கினர். இவர்களின் இந்த செயல் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.. தற்போது 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்களின் தேவைகள் அதிகம் அஃதே போல் அரசாங்கத்தின் தேவைகளும் அதிகம் நாமும் அரசுக்கு கை கொடுப்போம்....
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி.சரவணன்...