செய்யூர், திருப்போரூர் பகுதியில் மாதக்கணக்கில் தேங்கியுள்ள நெல்லை அரசு உடனடியாக கொள்முதல் செய்யவேண்டும்- மாவட்ட கலெக்டரிடம் திமுக எம்.பி.  எம் எல் ஏக்கள் கோரிக்கை...

செய்யூர், திருப்போரூர் பகுதியில் மாதக்கணக்கில் தேங்கியுள்ள நெல்லை அரசு உடனடியாக கொள்முதல் செய்யவேண்டும்- மாவட்ட கலெக்டரிடம் திமுக எம்.பி.  எம் எல் ஏக்கள் கோரிக்கை...


 


செங்கல்பட்டு மாவட்ட  ஆட்சியர்  ஜான் லூயிசை இடம்  காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், செய்யூர்  எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசு திருப்போரூர் எம்.எல்.ஏ. எல்.இதயவர்மன் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 


பின்பு செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. செல்வம் ஊரடங்கு உத்தரவால் செய்யூர், திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் பயிரடப்பட்ட பல்லாயிரம் ஏக்கர் தற்பூசணி பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வாங்குவதற்கு வியாபாரிகள் இல்லாமல் வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தில் உள்ளனர்  எனவே  அரசே 
நேரடியாக தற்பூசணி பழங்களை கொள்முதல் செய்து விற்பனை செய்யவேண்டும். மேலும் திருப்போரூர் செய்யூர் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் பல நாட்களாக  நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாமல் தேங்கியுள்ளது இதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிறது. எனவே தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்து அரசு குடோனுக்கு அனுப்ப வேண்டும் ஊரடாங்கால் பாதிக்கப்பட்ட  கல்பாக்கம் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு கல்பாக்கம் அனுமின் நிலையத்தின் மூலம் நிவாரணம் மற்றும் உணவு பொருள் வழங்கவேண்டும். செங்கல்பட்டு மாவட்டத்தில் 3மாதத்திற்கு பொதுக்களிடம் கேபில் டி.வி. கட்டணமும் வங்கியில் வாங்கப்பட்ட கடனுக்கு தவனை தொகையும் வசூலிக்க கூடாது. சில  தனியார் வங்கிகள்  தவனைக்கேட்டு தொந்தரவு செய்கிறார்கள்  இதனை தடுக்க வேண்டும் என மனு கொடுத்து பேசியுள்ளோம் உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட கலெக்டர் அ.ஜான் லூயிஸ் கூறியுள்ளார் என்றார். இவ்வாறு எம்.பி. செல்வம் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. 


செய்திகள்- உத்தமன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image