நாட்டறம்பள்ளி  பகுதிகளில்  வீடுவீடாக சென்று மக்களுக்கு சேவை செய்யும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம்...

நாட்டறம்பள்ளி  பகுதிகளில்  வீடுவீடாக சென்று மக்களுக்கு சேவை செய்யும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம்...


கொடிய நோய் என்று உலகம் முழுவதும்  அச்சுறுத்திவரும்  கொரோனா தொற்று அச்சம் காரணமாக நமது பாரத  நாடு  மட்டுமல்லாமல் உலக நாடுகள் தற்போது  ஸ்தம்பித்து நிற்கின்ற வேலையில். நமது மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள  ஏழை குடும்பங்களுக்கு எவ்வித ஓசையும் இன்றி நிவாரண பொருட்களை வழங்கி சேவை செய்து வருகிறது. உலக அளவில் புகழ்பெற்ற நாட்டறம்பள்ளி  ஸ்ரீராமகிருஷ்ணா மடம் மற்றும் அதன்  தலைவர் ஸ்ரீ ஸ்ரீ தியாகராஜனந்தா சுவாமிஜி இவர் நாட்டறம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில்  எந்நேரமும் ஓடோடி  பட்டியல் இனமக்கள், பழங்குடி, மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மிக ஏழ்மையில் வாழும், வாடும் பல்வேறு குடும்பத்தினருக்கு (இதில் ஏழை இஸ்லாம் குடும்பத்தினரும் அடக்கம்) ஊரடங்கு காலத்தில் அரிசி மற்றும் சமையலுக்குத் தேவையான  அதாவது ஒவ்வொரு குடும்பத்திற்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அரிசி குறைந்தது 15 கிலோவிலிருந்து  அதிகபட்சமாக 35 கிலோ வரை ,  து.பருப்பு தலா 3 கி., சமையல் எண்ணேய் தலா 1 கி., சாம்பார் பொடி தலா 100 கிராம், மஞ்சல் பொடி தலா 50 கிராம், உப்பு தலா 1 கிலோ என ஆறு வகையான சமையல் பொருட்களை வழங்கி வருகிறார்.  குறிப்பாக
நாட்டறம்பள்ளி  வட்டாட்சியரிடம் முறையாக அனுமதி பெற்றே இந்த நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  நாட்டறம்பள்ளி   ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ தியாகராஜனந்தா சுவாமிஜி சேவை பணி நாமும் பாராட்டுவோம்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... tamilsudarr.page...


செய்திகள்- கோவி.சரவணன்...


 


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image