வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே..
165 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான், 1853 ஏப்ரல் 16ந் தேதி, இந்தியாவில் முதல் ரயில் ஓடியது....
முக்கிய வியாபார ஸ்தலமான பம்பாயில் இருந்து தானேவுக்கு அந்த ரயில் இயக்கப்பட்டபோது, வருங்கால இந்தியாவை வடிவமைப்பதில் இந்த வாகனம் எந்தளவு பயன்படப் போகிறது என்பதை அங்கிருந்த யாருமே அப்போது அறிந்திருக்கவில்லை.
பம்பாயின் போரி பந்தரிலிருந்து தானே வரையிலான 34 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த ரயில் இயக்கப்பட்டது.
14 பெட்டிகளைக் கொண்ட அந்த ரயிலில் 400 விருந்தினர்கள் பயணம் செய்தனர்.
இந்த வரலாற்று நிகழ்வை பொதுமக்கள் பார்த்து மகிழ வேண்டும் என்பதற்காக அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.
புகைவிட்டுக் கொண்டே இரைச்சலுடன் ஓடிய அந்த இரும்பு வாகனத்தை ஏராளமானோர் விழிகள் விரிய வியப்புடன் பார்த்தனர்.
சிலர் பீதியில் பின்னங்கால் பிடரியில் அடிக்க அலறிக்கொண்டு ஓடினர்.
*இந்த வேடிக்கைகளை எல்லாம் பார்த்தபடி, 75 நிமிடங்களில் வெற்றிகரமாக இலக்கை வந்தடைந்த ரயிலுக்கு தானேவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.*
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
தமிழ் சுடரில் வரும் வரலாறு சுடரை பாருங்கள்...