ஆம்பூர் அருகே 15 கிலோமீட்டர் நடை பயணமாக வந்தது கர்ப்பிணிப் பெண்ணிற்கு ரத்தம் கொடுத்த இளைஞர்...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் மூன்றாவது வீதியை சேர்ந்தவர் சக்தி--திவ்யா தம்பதியினருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டு ஆண் குழந்தை பிறந்த நிலையில் திவ்யாவிற்கு ரத்தம் குறைவாக இருப்பதால் அவசரம் இரத்தம் தேவையுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் குழந்தை பிறந்த பெண்ணுக்கு (AB POSTIVE) ரத்தம் அவசரமாக தேவை என பரவி வருவதை கண்ட ஆம்பூர் அடுத்த சின்ன மலையாம் பட்டு பகுதியை சேர்ந்த சுரேந்தர் என்ற வாலிபர் ஊரடங்கு உத்தரவையும் பொருட்படுத்தாமல் உயிர்காக்கும் நோயாளிக்கு ரத்தம் அளித்து உதவும் வகையில் தானாகவே முன்வந்து ரத்தம் அளித்துள்ளார் இதனைக்கண்ட அரசு மருத்துவமனையில் உள்ள தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம் சார்பில் அவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளனர் மேலும் இச்சம்பவம் அறிந்த ஆம்பூர் பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் சமூக வலைத்தளங்களில் அவரைப் பாராட்டி வருகின்றனர்.. தானத்தில் சிறந்தது அன்னதானம் அதைவிட சிறந்த தானம் ரத்த தானமும் கண் தானம் ஆகும்.. இந்த இளைஞர் செயல் மற்ற இளைஞர்களுக்கு முன்மாதிரியாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை....
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்....