மறைமலைநகரில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் 1200 குடும்பங்களுக்கு கொரோனா  நிவாரண உதவி..

மறைமலைநகரில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் 1200 குடும்பங்களுக்கு கொரோனா  நிவாரண உதவி..


செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கீழக்கரணை பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில்  வசிக்கும் 1200 குடும்பங்களுக்கு அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.


மறைமலை நகர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நகர செயலாளர் ஆர்.வினோத்குமார் ஏற்பாட்டில் பாசறை சார்ந்தவர்கள் சார்பில் வழங்கப்பட்ட நிவாரண பொருட்களை மறைமலைநகர் காவல் ஆய்வாளர் நந்தகோபால் மற்றும் அதிமுக நகர செயலாளர் டி.எஸ்.ரவி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறி உள்ளிட்ட பொருட்களை நிவாரண உதவியாக வழங்கினர்.


இதில் கீழக்கரனை பகுதியை சார்ந்த பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நின்று நிவாரண பொருட்களை பெற்றுச்சென்றனர்.


இந்நிகழ்வின்போது தேமுதிக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜே.ஏழுமலை, பாஜக பத்மநாபன்தாஸ், மற்றும் அப்துல்கனி, ஏழுமலை,பழனி, ராம்குமார், யுவராஜ், கேசவன், தமிழ்வானன், தமிழரசன், வேலு, சுனில், கணேஷ், முனுசாமி, ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- உத்தமன்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image