வேலூரில் 1050 குடும்பங்களுக்கு மாளிகை பொருட்கள், கபசுர குடிநீர் வழங்கிய எம்பி கதிர் ஆனந்த்...

வேலூரில் 1050 குடும்பங்களுக்கு மாளிகை பொருட்கள், கபசுர குடிநீர் வழங்கிய எம்பி கதிர் ஆனந்த்...


தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருப்பதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக  மாளிகை பொருட்கள் இல்லாமல் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து 
வேலூர் அடுத்த  காட்பாடி ஒன்றியம் ஜாப்ராபேட்டை பகுதிக்கு சென்ற   வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தனது சொந்த செலவில்  1050 ஏழை  குடும்பங்களுக்கு அரிசி உட்பட மாளிகை பொருட்கள் மற்றும் முக கவசங்கள், கபசுர குடிநீர் வழங்கினார்.  உடன் ஒன்றிய கழக செயலாளர் சரவணன், மு.ஒன்றிய செயலாளர் தயாநிதி, ஊராட்சி கழக செயலாளர் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image