ஆம்பூர் அருகே கொரோனா நிவாரணமாக 1000 குடும்பங்களுக்கு மளிகை சாமான்கள் வழங்கிய வழக்கறிஞர்...
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அவரவர் வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தாங்கள் சமூக கடமைகள் உணர்த்து பல்வேறு சமூக ஆர்வலர்கள் தங்கள் பங்கிற்கு பொதுமக்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. அந்தவகையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி கெங்கையம்மன் ஆலய நிர்வாகி மற்றும் வழக்கறிஞருமான சண்முகம் தங்கள் குடும்பத்தின் மூலம் அஃதே பகுதியில் உள்ள 1000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் செய்யும் வகையில் மளிகைப் பொருட்கள் மற்றும் 6000 தேங்காய்கள் ,
தக்காளி 1000 கிலோ ,
கேரட் 500 கிலோ,
கத்திரிக்காய் 500 கிலோ ஆகிய பொருட்கள் அடங்கிய பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சபிதா சண்முகம் , வழக்கறிஞர் சரவணன் , தொழிலதிபர்கள் சஞ்சய் , கிராம நிர்வாக அலுவலர் சத்யசாய் , ஊராட்சி செயலாளர் பாபு மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...