கொரோனா ஊரடங்கு உத்தரவையொட்டி வாழ்வாதாரமின்றி தவித்த 100 குடும்பங்களுக்கு பெண்கள் முன்னேற்ற அமைப்பு இயக்குநர் அஞ்சலை நல உதவிகளை வழங்கினார்..

கொரோனா ஊரடங்கு உத்தரவையொட்டி வாழ்வாதாரமின்றி தவித்த 100 குடும்பங்களுக்கு பெண்கள் முன்னேற்ற அமைப்பு இயக்குநர் அஞ்சலை நல உதவிகளை வழங்கினார்..


தமிழகம் முமுவதும் கொடிய நோயான கொரோனா தொற்று பரவுவதை தடுக்க தமிழக அரசால் ஊரடங்க உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டிலியே உள்ளனர். தற்போது உள்ள சூழ்நிலையில் சென்னையிலுள்ள இளம் குழந்தைகள் உரிமை பேணும்  நிறுவனம் உதவியுடன் கல்பாக்கத்தில் இயங்கி வரும்  பெண்கள் முன்னேற்ற அமைப்பின் இயக்குநரும் தலைவருமான ஜி.அஞ்சலை ஏற்பாட்டில் அம்மனம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன்  முன்னிலையில்  செங்கல்பட்டு அடுத்த அம்மனம்பாக்கம் கொல்லமேடு பகுதியிலுள்ள இருளர் குடும்பங்களுக்கு  அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களான மளிகை பொருட்கள் ஆகியவற்றை சமூக இடைவெளியுடன் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.


இதனை தொடர்ந்து மதுராந்தகம் அடுத்த பரந்தூர், பச்சம்பாக்கம், நரியூர் ஆகிய பகுதிகள் உட்பட சுமார் 100 குடும்பங்களுக்கு  உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது சமூக ஆர்வலர்கள் ரமேஷ், ஜெகன் செல்லையா, வெண்ணிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- உத்தமன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image