திருப்பத்தூரில் 100 ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உதவி கரம் நீட்டிய திமுக எம்எல்ஏ...

திருப்பத்தூரில் 100 ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உதவி கரம் நீட்டிய திமுக எம்எல்ஏ...


திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் பல்வேறு வகையான தொழிலாளிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.‌ குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் போன்ற பகுதிகளுக்கு
மாவட்ட நிர்வாகம் சீல் வைத்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ தொழிலாளர்கள் நலன் கருதி தமிழக அரசு அவர்களுக்கு நல வாரியம் மூலம் நிவாரண உதவி செய்துள்ளது. இந்நிலையில்  திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் உள்ள  பாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட ஷேர்  ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உதவும் வகையில்   திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் (திமுக)  நல்லதம்பி கொரோனா தடுப்பு நிவாரண உதவியாக முதல் கட்டமாக  முககவசம், கிரிமிநாசினி, கையுறை மற்றும் சமையல் செய்ய தேவையான அரிசி,  உணவு பொருட்களை வழங்கினார். உடன்  கந்திலி ஒன்றிய செயளாளர்(வடக்கு) அன்பழகன் திருப்பத்தூர் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் எஸ்.மாது உட்பட திமுக நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image