வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே...
இன்று ஏப்ரல் 1️⃣0️⃣- ஆம் நாள் உலக ஹோமியோபதி நாள்.
ஜெர்மனியைச் சேர்ந்த அலோபதி மருத்துவரான டாக்டர் சாமுவேல் ஹானிமன், 1796ஆம் ஆண்டில் கண்டுபிடித்த மருத்துவ முறைதான் ஹோமியோபதி.
அலோபதி மருத்துவத்தின் பக்கவிளைவுகள் குறித்துப் பெரும் சங்கடம் கொண்டிருந்த டாக்டர் ஹானிமனுக்கு, ஹோமியோபதி மருத்துவம் பெரும் மனநிம்மதியைத் தந்தது.
ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர் என்பது போலவே, ஒவ்வொரு மனிதருக்கு வரும் நோயும், அதன் காரணங்களும் தனியானவை.
ஒருவருக்குத் தலைவலி வருகிறதென்றால், அதற்கு ஒற்றைப் பொது மருந்து கிடையாது என்பதே ஹோமியோபதி காட்டும் வழிமுறை.
ஒவ்வொரு உயிரும், அதற்கே உரிய பிரத்யேக உயிர்சக்தியால் கட்டுப்படுத்தப்படவும் நிர்வகிக்கவும் படுகிறது என்பதை உலகுக்கு முதலில் சொன்னவர் டாக்டர் ஹானிமன்.
*அதாவது "ஒத்தது ஒத்ததைக் குணப்படுத்தும்" (Likes are cured by likes) என்பது தான் ஹோமியோபதியின் அடிப்படை தத்துவம்.*
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
தமிழ் சுடரில் வரும் வரலாறு சுடரை பாருங்கள்...