திருப்பத்தூரில் முதலமைச்சர் பொது நிவாரணம் நிதிக்கு 1 லட்சம் வழங்கிய சிறுவர்கள்...
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், தொழிலாளிகள் என பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக அரசுக்கு கொரோனா நிவாரணம் நிதி வழங்க கோரிக்கை வைத்தார். அதன்பேரில் பலர் தமிழக முதலமைச்சர் பொது நிவாரணம் நிதிக்கு தங்களால் இயன்ற நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை பகுதியைச் சேர்ந்தவர்கள் கே.ஜி.ரமேஷ் மற்றும் தயாகரன் இவர்கள் திருப்பத்தூர் பகுதியில் ரெயின்போ டிவி சென்டர் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இவர்கள் இன்று தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக 1லட்சத்திற்கான காசோலையும் மற்றும் தயாகரன் மகன் மாற்றுத்திறனாளியான இவர் தனது சிறுசேமிப்பு பணமான 50ஆயிரம் ரூபாய் மற்றும் 5ஆம் வகுப்பு படிக்கும் அவரது மகள் யுக்தாவின் சிறுசேமிப்பு 50ஆயிரம் மேலும் தங்கள் குடும்பத்தின் சார்பில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 50ஆயிரம் மதிப்பிலான LED TV வை மாவட்ட ஆட்சியர் சிவனருள் இடம் வழங்கினார். அப்போது தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணி மற்றும் கொரோனா நோய் தடுப்பு மண்டல சிறப்பு அலுவலர் மங்கத்ராம் சர்மா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உட்பட பலர் உடன் இருந்தனர்...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...