வாணியம்பாடியில் அனைத்து துறை பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி பாலசுப்ரமணியம் தலைமையில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஐயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு அனைத்து துறை பணியாளர்களுக்கு கை சுத்திகரிப்பான் மற்றும் முககவசங்களை வழங்கினர்.
இதில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையிலான மருத்துவ குழு IR Thermal scanner மூலம் அனைத்து துறை பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவில் வட்டாட்சியர் சிவபிரகாசம் நன்றி கூறினார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி.சரவணன்- அரவிந்தன்..