புரோக்கர்கள் பிடியில் திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம். இன்று போய் நாளை வா என  அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்...

புரோக்கர்கள் பிடியில் திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம். இன்று போய் நாளை வா என  அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்...


திருப்பத்தூர் என்று சொன்னாலே சந்தனம் மணக்கும் ஜவ்வாது மலை அடிவாரத்தில் எழில் கொஞ்சும் சந்தன மாநகர் என்று அழைக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும். இந்த திருப்பத்தூர் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் முதல்முதலில் உருவாக்கப்பட்ட மாவட்டமாக இருந்தது. குறிப்பாக சேலம் முதல் சித்தூர் வரை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருப்பத்தூர் மாவட்டமாக இருந்த பெரிய நகரமாக திருப்பத்தூர் திகழ்ந்து வருகிறது. வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் உருவாக்கப்பட்டபோது வேலூர் உடன் இணைக்கப்பட்டு வேலூர் மாவட்ட தலைநகரமாக வேலூர் இருந்து வந்த நிலையில். திருப்பத்தூர் பகுதி பொதுமக்களின் தொடர் கோரிக்கையின் அடிப்படையில்  கடந்த ஆண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொற்கரங்களால்  புதிய மாவட்டமாக திருப்பத்தூர்  மாவட்டம் உருவாக்கப்பட்டு தற்பொழுது சிறப்பான மாவட்டமாக மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில்  விளங்கி வருகிறது. மாவட்ட தலைநகரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் தற்காலிகமாக வாடகை கட்டடத்தில் சிறிய பரப்பளவில் இயங்கி வருகிறது. தமிழக அரசு  வட்டார போக்குவரத்து அலுவலகங்களை  நவீன வடிவமைப்பில்  மேம்படுத்தும் வகையில் இனி எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் விண்ணப்பங்களும் ஆன்லைன் மூலமே மேற்கொள்ளவேண்டும் என அரசாணை வெளியிட்டு அதற்கான அதற்கான உத்தரவை நடைமுறைப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம், புதிய இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பதிவு, பெயர் மாற்றம், போன்றவைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது விதி முறை ஆகும். அப்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து வரும் பொதுமக்களிடம் ஓட்டுநர் பயிற்சி நிலையம் வைத்திருக்கும் நபர்கள் பொதுமக்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக இரண்டு மூன்று மடங்காக கட்டணம் வசூல் செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.. இதை தடுக்க வேண்டிய வட்டார போக்குவரத்து அலுவலகம் கண்டும் காணாமலும் இருப்பதால் திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குள் புரோக்கர்களின் கைவண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நேரடியாக வட்டார  போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை இன்று போய் நாளை வா என்ற பழி மொழிக்கு ஏற்ப தினமும் அலைக்கழிக்கும்சூழ்நிலை தொடர்ந்து வருவதால் பொதுமக்கள் இது என்னடா  கொடுமை என்று அருகிலிருக்கும் புரோக்கர்களிடம் சென்று அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட இருமடங்கு கொடுத்து தங்கள் வேலையை முடித்துக் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக  புரோக்கர்களை பார்க்காமல் எந்த காரியமும் நடைபெறுவதில்லை. ஊழலை கட்டுப்படுத்துவதாக கூறி தமிழக அரசு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யுங்கள் அதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலமே செலுத்தி விடுங்கள் என அரசாணை வெளியீடு அதனை செயல்படுத்தி வந்தாலும். புற்றீசல் போல் பெருகிவரும் புரோக்கர்களின் கைவண்ணத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image