சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் யோகேஸ்வரன் தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்
இந்த சம்பவம் வங்கியில் பரபரப்பை ஏற்படுத்தியது..
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன்
கடந்த 2013ம் ஆண்டு சென்னை ஆயுத படை காவலர்பணியில் சேர்ந்துள்ளார் இவர் 2018 முதல் சிவகங்கை ஆயுத படையில் பணியில் உள்ளார் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணியில் கடந்த சில காலங்களாக பணியாற்றி வருகிறார் இந்தியன் வங்கியில் உள்ள பாதுகாவலர்களுக்கான அறையில் தங்கியுள்ளார் இன்று காலை பாத்ரூமுக்குள் சென்று தனக்குத்தானே எஸ்எல்ஆர் எனப்படும் துப்பாக்கியால் தனக்கு தானே தற்கொலை செய்து கொண்டார் சத்தம் கேட்டு வந்த சக ஊழியர்கள்
தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் போலீசார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மாவட்டSP ரோஷித நாதன் சம்பவ இடத்தில் விசாரித்தார் தற்கொலைக்கான காரணம் குறித்து திருப்பத்தூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...