நாட்றம்பள்ளி அருகே வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த பெண் மீது டிராக்டர் ஏறி இருவர் பலி...
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த செத்தமலைப் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார் இவருடைய மனைவி காளியம்மாள்(27) இருவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இன்று காலை காளியம்மாள் மற்றும் அவருடைய பாட்டி நீலா (60) இருவரும் வீட்டிற்கு வெளியே சமையல் செய்து கொண்டுயிருந்தனர். அப்போது நாட்டறம்பள்ளி அடுத்த சுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் (22) என்பவர் விவசாயத்திற்கு பயன்படுத்தும் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பிக்கொண்டு அவ்வழியாக அதிவேகமாக வந்துள்ளார்.
அப்போது தீடீரென டிராக்டர் சாலை ஓரம் இருந்த ஜல்லியின் மீது ஏறி நிலைகுலைந்து அருகில் சமையல் செய்துகொண்டு இருந்த காளியம்மன் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். அதன்பின் அருகில் அமர்ந்து இருந்த மூதாட்டி நீலா மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் நீலாவை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்டறம்பள்ளி காவல் துறையினர் காளியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த பெண்கள் மீது டிராக்டர் மோதி இருவர் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் மற்றும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்தி- கோவி. சரவணன்..