அதீத கல்வியறிவு மோகத்தில் உலகம் முழுவதும் பரவலாக கற்றுத்தராமல் போன விஷயங்களில் முதன்மையானது,  நிலையாமை..உயிர் நிலையாமை..

 


அதீத கல்வியறிவு மோகத்தில் உலகம் முழுவதும் பரவலாக கற்றுத்தராமல் போன விஷயங்களில் முதன்மையானது,  நிலையாமை..உயிர் நிலையாமை..


இந்த தத்துவம் புரிஞ்சிருந்தா கொரோனா வந்தவுடனே அதன் வீரியத்தை புரிஞ்ச சீனாகாரன் உலகையே உஷார் பண்ணியிருப்பான்..அவன் பின்விளைவுகளால, லம்ப்பா உலகத்துகிட்ட இருந்து எவ்ளோ தேறும்னு கணக்கு  போட்டானோ என்னமோ, முதலுக்கே மோசமா போயிகிட்டு இருக்கு..


சுத்தி இருக்கிறவன் எவனும் நல்லா இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறது முட்டாள்தனம்..


சுத்தி இருக்கிவன் நல்லா இருந்தாதானே நாம நலிஞ்சிபோனா அவன் காப்பாத்துவான்ற  அடிப்படை சிந்தனையே இல்லாத குணம் அது..


உயிர் நிலையாமை புரியாமல் அதன் மீதும் மனிதன் கட்டுகிற பிரமாண்ட விஷயங்கள் அத்தனையும் பட்டென்று தகர்ந்துபோகும்..


இப்பக்கூட பாருங்க.. நாட்டின் தலைமை பீடம்  என்ன செய்யணும்..? முதல்ல மக்களின் உயிரை நோயிலிருந்து காப்பாத்தணும்..


*_வெளிநாட்டுல இருந்து வந்தவங்களை பத்தியே பேசறாங்களே தவிர, அவங்களால உள்நாட்டில் எத்தனை பேருக்கு பரவியிருக்குனு வேகவேகமா செயல் பட தோணலை._*


*வெளிநாட்டு பயணத்தொடர்பே இல்லாதவங்கள, ஊருக்கு பத்துபேரை சோதிச்சா, உண்மை நிலவரம் புரிய ஆரம்பிக்கும்..*


இவங்க என்ன நினைக்கறாங்க.. அறிகுறி வந்தா ஆஸ்பிடலுக்கு வரட்டும் அப்புறம் பார்த்துக்கலாம்னு இருக்காங்க..


*ஆட்சிப்பொறுப்பிலும்  உயர் அதிகார வர்க்கத்திலும் இருக்கிறவங்க எத்தனைபேர் , தங்களை பரிசோதிச்சி பார்த்திருப்பாங்க?*


*_பிரிட்டன்ல இளவரசருக்கும், பிரதமருக்குமே கொரோனா-...._*


கொரோனா பாதிப்பு இல்லாதவங்கள கண்டுபிடிச்சி தெளிவாக்க ஆரம்பிச்சா, எதிர்காலம் தெரியும்..


*பரிசோதனைகள் அனைவருக்கும் முன்னதாகவே  மலிவாக கிடைக்கச்செய்வதுதான் இதற்கு முதல் தீர்வாக இருக்கும்..*


பல்வேறு துறைகளில் பின்னாடிக்கு திட்டமிடலுக்கெல்லாம் இப்போதைக்கு அவசியமற்ற ஒன்று


ஏழுமலை வெங்கடேசனாகிய என்னைக்கேட்டால், வீடுகளில் முடங்கிகிடக்கும் மக்களின் பசியை தீர்ப்பதற்கு அடுத்து, அரசின் நிதி ஆதாரங்கள் பெருமளவு முதன்மையாக நோக்கி பாயவேண்டியது மருத்துவத்துறை மீதுதான்..


*மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சரின் முகம் இன்னேரம் அனைவரின் மனதிலும் பதிந்திருக்கவேண்டும்..உங்களுக்கு பதிந்திருக்கிறதா?*


*_கோல்டன் அவர் வெகு வேகமாக கடந்துகொண்டிருக்கிறது.._*


*இவ்ளோதான் நம்ம சிற்றறிவுக்கு எட்டியது...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image