திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள்  அறிக்கை...

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள்  அறிக்கை...


     திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்றைய நாள் வரையில் வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர் வந்துள்ளவர்கள் 715 நபர்கள், வெளி மாநிலத்தில் இருந்து வந்துள்ளவர்கள் 158 நபர்கள் என மொத்தம் 
873 நபர்களை 28 நாள் தனிமை படுத்தி அவர்களை முழுமையாக கண்காணிக்க வேண்டும். இதில் 
எவ்வித பிரச்சனைகளும் ஏற்பட்டு விடக்கூடாது. சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, 
நகராட்சி நிர்வாகத்துறை பணியாளர்களுக்கு பணி ஆணைகள் வழங்கி அவர்களை நாள்தோறும் கண்காணித்து அறிக்கையை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அளிக்க வேண்டும். பொதுமக்களின்
அடிப்படை தேவை உணவு பொருட்கள் விற்பனை மளிகை கடைகளை சுழற்சி முறையில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பால் விற்பனை கடைகளை திறந்து வைக்கலாம். இக்கடைகளில் 
விற்பனையாளார்கள் சமூக இடைவெளியையும், பாதுகாப்பு கவசங்களையும் கட்டாயம் பயன்படுத்திட வேண்டும். அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள், விவாசாய வேளாண் 
விளைபொருட்களை சென்னை போனற் பெரிய நகரங்களுக்கு எடுத்து செல்லும் வாகனங்களுக்கும்,
பொருட்கள் வாங்க செல்லும் சிறிய கடைகள் உரிமையாளர்களுக்கும் வாகன அனுமதி அடையாள 
அட்டைகளை வழங்கிட நாளை முதல் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை வைத்துக்கொண்டு இவர்கள் வாகனங்களில் செல்லும்போது போலீசார் அனுமதிப்பார்கள். பெட்ரோல்,பங்க் காலை 8 
மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அத்தியாவசிய 
தேவைகளுக்கும் வணிக ரீதியாக செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காய்கறிகளை பொதுமக்கள் சமூக இடைவெளியில் வாங்கி செல்ல உழவர் சந்ததைகள், மற்றும் நகர பேருந்து நிலையங்களில் நாளை முதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ,சிறிய நான்கு சக்கர வாகனங்கள் மூலம் பொருட்களை எடுத்து சென்று விற்பனை செய்ய வாகனங்களுக்கு அனுமதி அட்டைகள் நாளை முதல் வழங்கப்படும். இவற்றில் விற்பனையாளர்கள் கட்டாயமாக பாதுகாப்பு கவசங்களை அணிந்துக்கொண்டு உணவு பொருட்களை தெருக்களில் விற்பனை செய்யலாம். இதுபோன்ற 
நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும் நாம் மக்களின் அடிப்படை தேவைகளை தங்கு
தடையின்றி கிடைக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் தொற்று போனற் பிரச்சனைகளுக்கு இடம்
அளிக்காமல் சுகாதார விதிகளின் படி இப்பணிகள் நடைப்பெறுவதை வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் கண்காணிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் சிவன் அருள்
உத்தரவிட்டுள்ளார்.


இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image