வாணியம்பாடி புதிய கூடுதல் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ள கடைகளில் காய் கறி சந்தையை ஆய்வு செய்தார் அமைச்சர் நீலோபர் கபீல்...
அங்குள்ள கடைகளில் பொதுமக்களுக்கு காய் கறிகள் அதிக விலைக்கு விற்பனை செய்தவர்களை கண்டித்தார்.
கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க வாணியம்பாடி தினசரி காய் கரி சந்தையில் கூட்டம் அதிகமாக வருவதால் மக்கைடையே இடைவெளி ஏற்படுத்த அந்த சந்தையை இரண்டாக பிரித்து வாணியம்பாடி கூடுதல் பேருந்து நிலையத்திற்கு மாற்றி அங்கு பொதுமக்களுக்கு காய் கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.பொதுமக்களும் இடைவெளி விட்டு வாங்க வரையப்பட்டுள்ள வட்டத்திற்கு உள்ளே நின்றவாறு காய் கறிகளை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.அங்கு ஆய்வு செய்ய வந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் தன் வீட்டிற்கு தேவையான காய் கறிகளை அங்குள்ள கடையில் பணம் கொடுத்து வாங்கினார்.
பின்னர் மற்றொரு கடையில் அதிக விலைக்கு பொதுமக்களுக்கு காய் கறிகள் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அங்கு சென்ற அமைச்சர் விற்பனை செய்பவரை அதிக விலைக்கு விற்பனை செய்ய கூடாது என்று கண்டித்து எச்சரிக்கை விடுத்தார்.மேலும் அங்கு ஒரு பலகை அமைத்து அந்த பலகையில் தினசரி விலைகளை எழுதப்படவேண்டும் என்று உத்தரவிட்டார்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன். அரவிந்தன்..