மூத்த அரசியல்வாதியும்,  திமுக பொதுச் செயலாளருமான க.அன்பழகன் காலமானார்.

மூத்த அரசியல்வாதியும்,  திமுக பொதுச் செயலாளருமான க.அன்பழகன் காலமானார்.


_திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் 1922 டிசம்பர் 19-ம் தேதி பிறந்த அன்பழகனின் இயற்பெயர் இராமையா. சுயமரியாதை இயக்க கொள்கைகளில் கொண்ட ஈடுபாட்டின் காரணத்தால் அன்பழகன் என பெயரை மாற்றிக்கொண்டார்._ 


_1957-இல் திமுக சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தல் மூலம் சென்னை எழும்பூரிலிருந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு, 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர்._ 


_1971-இல் கலைஞரின் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்று பின் கல்வித்துறை, நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக திறம்பட பணியாற்றியவர்._


_1984-ஆம் ஆண்டு ஈழத்தமிழர் கோரிக்கையை வலியுறுத்தி திமுக தலைவர் கலைஞரோடு, தனது எம்.எல்.ஏ பதவியை இராஜினாமா செய்தவர் பேராசிரியர் க.அன்பழகன்._ 


_1 முறை மேல்சபை உறுப்பினராகவும், 1 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்._ 98 வயதான அன்பழகன் கடந்த ஒரு வருடங்களாக உடல்நிலை காரணமாக எந்த ஒரு கட்சி நிகழ்களில் கலந்துக்கொள்ளாமல் வீட்டில் இருந்தார். கடந்த ஒரு வாரமாக சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்கை பிரிவில் அனுமதிக்கபட்டு இருந்தார் என்பது குறிப்பிடதாக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- கோவி. சரவணன்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image