ஸ்டாலினுக்கு எதிராக அழகிரியை கொம்பு சீவும் ஆர்.எஸ்.எஸ்.. பலே திட்டம். திமுக தொண்டர்கள் அதிர்ச்சி...
தமிழகத்தில் அடுத்த 2021ல் நடைபெறும் சட்ட மன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ், இதற்காக கருணாநிதியின் மூத்த மகனும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியுடன் நெருக்கம் காட்டி, பல வியூகங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதை எதிர்கொள்ள இங்குள்ள தமிழகத்தில் உள்ள முக்கியகட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
ஆளும் அதிமுக, தங்களது கட்சி பலவீனமாக உள்ள பகுதிகளை குறிவைத்து, அங்குள்ள மக்களை திருப்திபடுத்தும் வகையில் பல அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததை குறிப்பிடலாம். இதுபோன்ற பல்வேறு திட்டங்களை தற்போது ஆளும் அதிமுக அரசு பல அதிரடி திட்டங்கள் மூலம் தமிழக மக்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளது.
பழம் தின்று கொட்டை போட்ட அனுபவமுள்ள திமுக தங்கள் கட்சி பிடிக்கும் வகையில் தங்கள் கட்சிக்கு ஆலோசனை கூற வட இந்தியாவைச் சேர்ந்த அரசியல் பயிற்சி வழங்கும் பிரசாந்த் கிஷோர் என்பவரை பலகோடி ரூபாய் செலவழித்து சட்டசபை தேர்தல் வியூகத்தை வகுத்துத்தருமாறு சொல்லி தங்கள் கட்சி பணிகளை தொடங்கி இருக்கிறது.
ஆனால், எப்படியும் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகிவிடக்கூடாது என்று கங்கணம் கட்டி கொண்டு வரும் வலதுசாரி அமைப்பான ஆர்.எஸ்.எஸ். களமிறங்கி இருக்கிறதாம். இதற்கான பல வியூகம் வகுத்து செயல்படும் ஆர்.எஸ்.எஸ், அதன் ஒருபகுதியாக ஸ்டாலினுக்கு எதிராக செயல்படும் அவரது அண்ணன் மு.க.அழகிரியையும் அணுகி இருக்கிறதாம்.
குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகத், மத்திய அமைச்சர்கள் சிலர், மு.க. அழகிரியுடன் தொடர்பில் இருக்கிறார்களாம். திமுகவுக்கு போட்டியாக கட்சி தொடங்குங்கள் மீதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்ற ரீதியின் பேசி வருகிறார்களாம்.
ஸ்டாலினை ஒரு கை பார்க்க வேண்டுமென்று நேரம் பார்த்து கொண்டிருக்கும் அழகிரியோ, தனிக்கட்சி என்பதெல்லாம் இனி சரிபட்டு வராது சொல்லி, பிடி கொடுக்காமல் இருந்து வருகிறாராம். ஆனாலும், தென் மாவட்டங்களில் திமுகவுக்கு செக் வைக்க, அழகிரியின் உதவி தேவை என்பதால், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் தொடர்ந்து பேசி வருவதாக கூறப்படுகிறது. எது எப்படியோ திமுகவில் விரைவில் விரிசல் ஏற்படும் என தமிழக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதற்காக விரைவில் கலைஞர் திமுக என்ற புதிய கட்சி ஆரம்பம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி.சரவணன்...