திருப்பத்தூர் எம்ஜிஆர் காய்கறிகள் மார்கெட்டில் அதிக விலைக்கு விற்கப்படும் காய்கறிகள் மக்கள் வேதனை...
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் இரண்டாம் கட்ட நிலையில் இருக்கிறது. இந்த வைரசை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் மத்திய அரசு இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. நேற்று இரவு உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நமது நாட்டின் மக்களின் ஒவ்வொருவரின் உயிரும் விலைமதிக்க முடியாததாகும். எனவே இந்த குடியை நோயிலிருந்து நம்மளை தற்காத்துக்கொள்ள அனைவரும் தங்கள் வீடுகளில் தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள் என்ற வேண்டுகோளை நாட்டு மக்களிடம் வேண்டுகோளாக வைத்தார். குறிப்பாக தமிழ்நாட்டில் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. ஒரு சில அடிப்படைத் தேவைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்துள்ளது மத்திய மாநில அரசுகள். குறிப்பாக வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, பத்திரிக்கை துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட சில துறைகளுக்கு விதிவிலக்கு அளித்துள்ளது. குறிப்பாக பொதுமக்களின் அன்றாட தேவைகளுக்காக, மளிகை கடை, காய்கறி கடை, இறைச்சிக் கடை, மெடிக்கல், மருத்துவமனைகள் போன்ற ஒருசில நிபந்தனைகளுடன் செயல்படலாம் என அரசாணை வெளியிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை பயன்படுத்திக்கொண்ட ஒரு சில வியாபாரிகள் காய்கறிகள், இதர பொருட்களின் விலையை இரண்டு மூன்று மடங்குக்கு அதிக விலைக்கு விற்கும் அவளை நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருப்பத்தூர் நகரில் இயக்கும் எம்ஜிஆர் காய்கறி மார்க்கெட்டில் ஐந்து ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 கிலோ தக்காளி தற்போது 20 ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட வந்த 1 கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட வந்த கத்திரிக்காய் 2 கிலோ 80 ரூபாய்க்கும், இப்படி அதிக விலைக்கு விற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அரசின் இந்த ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்பொழுது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தை அறியாமல் திருப்பத்தூர் , வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் பொதுமக்கள் சர்வ சாதாரணமாக சுற்றித்திரியும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் மக்களை பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தாலும் அதனை முறையாக பின்பற்ற வேண்டிய பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வு இல்லை என்பதையே இதை காட்டுகிறது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...