இன்றைய ராசிபலன்கள் பற்றி தெரிந்துகொள்ள தமிழ் சுடரில் வரும் ஜோதிட சுடரை பாருங்கள்..

இன்றைய (03-03-2020) ராசி பலன்கள்..


மேஷம்


 வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் பொருளாதாரநிலை மேம்படும். பிறரிடம் இருந்து எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். மந்தநிலை நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் அமையும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : நம்பிக்கை மேம்படும். 


பரணி : வரவுகள் அதிகரிக்கும்.


கிருத்திகை :  மாற்றம் உண்டாகும். 
---------------------------------------


 


 


ரிஷபம்


 உடல் தோற்றப்பொலிவிற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். புதிய லட்சியம் ஒன்றை உருவாக்கி அதற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். விவாதங்களில் ஈடுபட்டு கீர்த்தி பெறுவீர்கள். செய்யும் தொழிலில் திறமைகள் வெளிப்படும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



கிருத்திகை :  செயல்திறன் மேம்படும்.


ரோகிணி :  மாற்றங்கள் உண்டாகும்.


மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும். 
---------------------------------------


 


 


மிதுனம்


 மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கல்வியில் சற்று மந்தமான சூழல் உண்டாகும். திறமைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் அமையும். வாகனப் பயணங்களில் ஏற்படும் அலைச்சல்களால் சாதகமான சூழல் அமையும். உடைமைகளில் சற்று கவனத்துடன் இருக்கவும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.


திருவாதிரை : திறமைகள் வெளிப்படும்.


புனர்பூசம் : சாதகமான நாள்.
---------------------------------------


 


 


கடகம்


 குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். போட்டியில் ஈடுபட்டு பரிசுகளை பெறுவதற்கான சூழல் அமையும். தலைமைப் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.  உறவினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



புனர்பூசம் : ஆசிகள் கிடைக்கும். 


பூசம் : ஆதரவு உண்டாகும். 


ஆயில்யம் : இன்னல்கள் குறையும்.
---------------------------------------


 


 


சிம்மம்


 புத்திரர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகளின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். புதிய மனைகள் வாங்குவதற்கான அனுகூலமான சூழல் உண்டாகும்.  கால்நடைகளால் தொழில் சார்ந்த ஆதாயம் மேம்படும். ஆன்மிகம் சம்பந்தமான நம்பிக்கை அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



மகம் : மகிழ்ச்சி உண்டாகும்.


பூரம் :  அனுகூலமான நாள்.


உத்திரம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
---------------------------------------


 


 


கன்னி


 விளையாட்டு வீரர்கள் போட்டியில் ஈடுபடும் போது சற்று கவனத்துடன் இருக்கவும். உடலின் பலம் மேம்படுவதற்கான முயற்சியில் கவனம் செலுத்துவீர்கள். பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய தொழில் நுட்பங்களின் மூலம் செல்வாக்கு மேம்படும். எதிர்காலம் சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திரம் : கவனம் வேண்டும்.


அஸ்தம் : அனுகூலமான நாள்.


சித்திரை : முயற்சிகள் அதிகரிக்கும்.
---------------------------------------


 


 


துலாம்


 மனதில் தோன்றும் பல்வேறு எண்ணங்களால் சரியான முடிவை எடுக்க முடியாமல் குழப்பமான சூழல் உண்டாகும். தேவையில்லாத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் காலதாமதம் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் ஈடுபடும் போது கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



சித்திரை : குழப்பமான நாள்.


சுவாதி : முடிவுகளில் காலதாமதம் உண்டாகும்.


விசாகம் :  கவனம் வேண்டும்.
---------------------------------------


 


 


விருச்சிகம்


 உத்தியோகஸ்தர்கள் செய்யும் பணியில் கவனமாக செயல்படவும். உறவினர்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பும், அவர்களின் மூலம் முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளும் கிடைக்கும். குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை :  மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மிதமான பழுப்பு 



விசாகம் : கவனம் வேண்டும்.


அனுஷம் : புதிய நட்பு கிடைக்கும்.


கேட்டை : எண்ணங்கள் மேம்படும்.
---------------------------------------


 


 


தனுசு


 கலைஞர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். வாதத்திறமையால் இலாபம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான சில விரயங்கள் உண்டாகும். பிரியமானவர்களிடம் அனுசரித்து செல்லவும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மூலம் : சாதகமான நாள். 


பூராடம் : எண்ணங்கள் ஈடேறும்.


உத்திராடம் : இலாபம் உண்டாகும்.
---------------------------------------


 


 


மகரம்


 உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களின் ஆதரவால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களால் சாதகமான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.


திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.


அவிட்டம் :  சாதகமான நாள்.
---------------------------------------


 


 


கும்பம்


  பணிபுரியும் இடங்களில் உயர்பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சுயதொழில் புரிவோருக்கு வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான முதலீடுகள் அதிகரிக்கும். எண்ணங்களில் தெளிவு உண்டாகும். ஆன்மிக எண்ணங்களில் மனம் ஈடுபடும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



அவிட்டம் :  பதவி உயர்வு சாதகமாகும்.


சதயம் : பயணங்கள் மேம்படும்.


பூரட்டாதி : தெளிவு உண்டாகும்.
---------------------------------------


 


 


மீனம்


 எதிர்பாராத தனவரவு உண்டாகும். ஆராய்ச்சி பணியில் உள்ளவர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகளில் உள்ள இடர்பாடுகள் குறைந்து சாதகமான சூழல் அமையும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். இளைய உடன்பிறப்புகளின் மூலம் சில விரய செலவுகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் :  இளஞ்சிவப்பு



பூரட்டாதி : தனவரவு உண்டாகும்.


உத்திரட்டாதி : இடர்பாடுகள் குறையும்.


ரேவதி : செலவுகள் உண்டாகும்.
----------------------------


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image