திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை மாவட்ட ஆட்சியர், எஸ்பி, நீதிபதிகள் பங்கேற்பு...
தற்போது உலக அளவில் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் காய்ச்சலால் நாளுக்கு நாள் உயிர் பழி அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் ஒரு சில இடங்களில் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலால் இதுவரை இந்தியாவில் 3 பேர் பலியாகி உள்ள நிலையில். இந்த கொரோனா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதற்காக பொதுமக்கள் அதிகளவில் கூடும் ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையங்கள் போன்ற பகுதிகளில் தூய்மையை கடைபிடிக்கும் வகையில் கை கழுவும் பழக்கத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் வகையில் திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்கள் மற்றும் நீதிமன்றத்திற்கு வரும் வழக்காடிகள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், திருப்பத்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி வேலரசு, மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி இந்திராணி, திருப்பத்தூர் பார் கவுன்சில் செயலாளர் ஞானமோகன், மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், நகராட்சி அதிகாரிகள், துப்புரவு ஊழியர்கள், பொதுமக்கள், வழக்காடிகள் என பலர் கலந்து கொண்டனர்...
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...