திருப்பத்தூர் அருகே மதுப்பழக்கத்திற்கு கணவன் அடிமை.. மனைவி தற்கொலை முயற்சி..
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் கொரட்டி பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கோபால் இவர்களுடைய மகன் சதீஷ்(26) என்பவருக்கும் மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பூங்கொடிகும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். விவசாயம் மற்றும் கூலித்தொழிலாளி செய்யும் சதீஷ் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி உள்ளார். மதுப்பழக்கத்தை தடுத்திட வேண்டும் என்ற நோக்கில் பூங்கொடி பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு அதில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் தம்பதியர் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு ஒருசில நேரங்களில் சன்டையாக மாறும் போது அருகில் இருக்கும் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் இருவரையும் சமாதானப் படுத்தியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் மது அருந்திவிட்டு வந்த சதிஷ் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் கோபம் அடைந்த பூங்கொடி தனது தாய் வீடுயான மாங்குப்பத்திற்கு சென்றுள்ளார். இதனை அறிந்த சதீஷ் அங்கு சென்று மீண்டும் மதுபோதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு பூங்கொடியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த
பூங்கொடி விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் பூங்கொடியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடி பழக்கம் ஒரு குடியை கெடுக்கும் என்பது பழமொழி..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...