திமுக கொண்டு வந்த திட்டத்தை தற்போது திமுகவே எதிர்ப்பு தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்...
தலைமை செயலாளகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில்..
2003ல் திமுக மத்திய ஆட்சி கூட்டணியில் இருந்த போது என்.பி.ஆர் கொண்டுவரப்பட்டது என்றும் 2010 ல் முதல் முதலாக திமுக ஆட்சியில் அமல்படுத்தினார்களானால் அப்போது திமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டார்.
தற்போது உள்ள என்.பி.ஆரில் பெற்றோர் மற்றும் மனைவியின் பெயர், கைபேசி எண் , பிறந்த இடம் போன்ற மூன்று புதிய அம்சங்கள் சேர்க்கபப்ட்டுள்ளதாகவும்
இதனால் இஸ்லாமியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்
இஸ்லாமியர்களுக்கு அச்சத்தை போக்கும் வகையில் மத்திய அரசு விளக்கம் அளிக்குமாறு கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளோம் ஆனால் இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றார். இதனால் என்.பி.ஆர் கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிடவில்லை எனவும், கணக்கெடுப்பை நிறுத்தி வைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
தற்போது வரை என்.பி.ஆர் கணக்கெடுப்பு பணி தமிழகத்தில் துவங்கவில்லை என்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மட்டுமே அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக கூறினார்.
மத்திய அரசு இயற்றிய சட்டத்தை, ரத்து செய்ய மாநில அரசுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனக் கூறிய அவர்,
இது எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கும் தெரியும் என சுட்டிக்காட்டினார்.
என்.பி.ஆர் கணக்கெடுப்பு குறித்து சட்ட மன்றத்தில் நேற்று ஸ்டாலின் தவறான தகவலை கூறியதாகவும்
என்.பி.ஆர் கணக்கெடுப்பிற்கு எந்த ஆவணமும் சமர்பிக்க வேண்டாம் என தெரிவித்தார்.
கணக்கெடுப்பிற்கு வரும் அலுவலர்கள் நாம் கொடுக்கும் தகவல்களை அவர்கள் பதிவு செய்து கொள்வார்கள், ஆவணம் எதுவும் வேண்டாம் என விளக்கம் அளித்தார்.
2020 என்.பி.ஆர் கணக்கெடுப்பிற்கு அனைத்து மாநிலத்திற்கும் ஒரே மாதிரியான படிவமாகதான் மத்திய அரசு வழங்கும்,
அதில் புதிதாக இணைக்கப்பட்ட 3 அம்சங்களும் இடம்பெற்றிருக்கும் எனவே இஸ்லாமியர்கள் அச்சத்தை போக்க அது குறித்து விளக்கம் கேட்டிருப்பதாக கூறினார்.
இஸ்லாமியர்கள் கோரிக்கையின் படி என்.பி.ஆரை செயல்படுத்த அனைத்து நடவடிக்கையும் முதல்வர் எடுத்து வருகிறார் என்றும் என்.பி.ஆர் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை என்றார்.
2010 என்.பி.ஆர் அட்டவணையில் எந்தெந்த திருவிழாக்கள் இருந்ததோ அதே திருவிழாக்கள் தான் இந்த முறையும் இடம்பெற்றுள்ளதாகவும், பிரை அடிப்படையில் இஸ்லாமியர்கள் பண்டிகை கொண்டாடுவதால அவை 2010 என்.பி.ஆரில் இடம்பெறவில்லை என்றார். மேலும் 2010லேயே
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கலாம் எனவும் கூறினார்.
சி.ஏ.ஏ சட்டத்தால் என்.பி.ஆர் கொண்டுவர வில்லை எமவ 2010 ல் கொண்டு வந்ததால் இப்போதும் அதே நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது என்றார்.
இந்தியா முழுவதும் இது குறித்து முழுபையான விழிப்புணர்வு கொண்டு செல்ல மத்திய அரசு முயல்வதாகவும், எதிர்கட்சிகள் இதில் அரசியல் செய்து கொண்டுள்ளனர் என குற்றம்சாட்டினார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ஒத்துழைக்க வேண்டாம் என நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து ஸ்டாலின் கூறியதை சுட்டிக்காட்டிய அவர்,
போராட்டத்தை தூண்டும் வகையில் ஸ்டாலின் பேசினார் எனவும் கணக்கெடுப்பு எடுக்காவிட்டால் வளர்ச்சி திட்டங்கள் எப்படி கொண்டு வர முடியும் என கேள்வி எழுப்பினார்.
முழுக்க முழுக்க அரசியலுக்காக சிறுபான்மையினர, எதிர்கட்சிகள் பலிகெடாவாக்கிறதாக குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் ஆசிரியர்கள் மக்கள் தொகை கணெக்கெடுப்பில் ஈடுபடுவதால் , ஜூன் 16 முதல் ஜூலை 30 வரை கணக்கெடுப்பிற்கு உகந்த நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
கண்ணை இமை காப்பது போல முதல்வர் சிறுபான்மையினரை காத்து வருகிறார். ஆனால் எதிர்கட்சி தலைவர் சதி செய்து அரசியல் லாபத்திற்காக செயல்படுகிறார் என்றார்.
தமிழகத்தில் பிறந்த சறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கபப்டும், கடைசி வரை நிற்போம் என முதல்வர் கூறி உள்ளார் ,பாதிப்பு வராது என்பது உறுதி, போராட தேவையில்லை, வீதியில் வந்து அரசுக்கு உணர்த்த வேண்டும் என்று இல்லை முதல்வர் உங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் நேரில் சந்திப்பார் என்றார்.
100 சதவிகிதம் முதல்வர் இஸ்லாமியர்கள் கவசமாக செயல்படுவார் , எதிர்கட்சிகள் சதி செயலில் பலிகெடவாகிறது கவலை அளிப்பதாகவும் அப்போது கூறினார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...