திருச்சி அருகே அதிசயிக்கத்தக்க அரசு பள்ளி. எந்திரத்தில் ஆர்வத்துடன் வாக்களித்த மாணவ மாணவிகள்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியிலும் 2019- 20 ம் ஆண்டிற்கான மாணவ பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள இந்த பள்ளியில் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் 244 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் ராஜசேகரன் தலைமையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
பள்ளியில் ஒரு வகுப்பறை வாக்குசாவடி மையமாக அமைக்கப்பட்டு வாக்குசாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி முகவர்கள், வாக்கு பதிவு அலுவலர் 1 மற்றும் 2 ஆகிய பிரிவுகளில் மாணவர்களே அதிகாரிகளாக அமர்ந்திருந்தனர்.
வாக்காளர் அடையாள அட்டையாக மாணவ மாணவிகள் தங்களின் பள்ளி அடையாள அட்டையை காண்பித்தனர். இதைத் தொடர்ந்து இன்று மதியம் உணவு இடைவெளிக்குப் பின் மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது.
தேர்தலில் மொத்தம் 9 மாணவ மாணவிகள் வேட்பாளர்களாக களத்தில் இருந்தனர். இதையடுத்து வழக்கமாக தேர்தலில் பயன்படுத்தும் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டு அதில் தேர்தலில் போட்டியிட்ட 9 வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் பொறிக்கப்பட்டது.
மாணவ - மாணவிகள் தனித்தனி வரிசையில் நின்று ஒவ்வொருவராக வந்து வாக்களித்தனர். இதில் வழக்கமாக நடைபெறும் தேர்தலைப் போன்றே அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டது.
இந்த வாக்குப் பதிவில் பிரதமர், 5 அமைச்சர்கள், 3 எதிர்கட்சியினர் என வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த வாக்கு எண்ணிக்கை மாலை நிறைவு பெற்றது. பின்னர் வாக்கு எண்ணும் அறை அடைக்கப்பட்டு வேட்பாளர்களாக இருந்த மாணவ - மாணவிகள் வரவழைக்கப்பட்டு பதிவாக வாக்குகள் முறையாக உள்ளதா? என்பதை சரிபார்க்கப்பட்டு வாக்கு இயந்திற்கும் இவிஎம் இயந்திரத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை உடனே தொடங்கி நடைபெற்றது.
அதன்படி மாரியம்மாள் 98 வாக்குகள் பெற்று பிரதமராகவும், செந்தமிழ்செல்வி 41 வாக்குகளும், கவிமதி 23 வாக்குகளும், லோகேஷ்வரி 21 வாக்குகளும், செல்வகணபதி 17 வாக்குகளும், பஜீருல்லா 9 வாக்குகளும் பெற்று அமைச்சர்களாகவும், கனகப் பிரியா 8 வாக்குகளும், ஜெயஸ்ரீ 3 வாக்குகளும், சர்மிளா ஒரு வாக்குகள் பெற்று எதிர்கட்சியாகவும் வாக்குகளின் அடிப்படையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
நோட்டாவிற்கு ஒரு வாக்குகள் கூட பதிவாகவில்லை.
தேர்தல் பார்வையாளர்களாக ஊனையூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சற்குணன், ஒந்தாம்பட்டி அரசு பள்ளி ஆசிரியர் சார்லஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கான பதவியேற்பு விழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
எடுத்து உடனடியாக ஒவ்வொருவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு பாராளுமன்றம் கூடியது இதில்.
தமிழ் மொழி இந்திய ஆட்சி மொழியாக அறிவிக்க படுவதாகவும், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை மணப்பாறை பகுதி முழுவதும் விதிக்கப்படுவதாகவும், ஆசிரியர் பணி உயர்நீதிமன்ற நீதிபதியின் பணிக்கு இணையாக மதிக்கப்படும் என்றும் மது புகையிலை இந்தியா முழுவதும் தடை செய்யப்படும் என்றும் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறை அமல் படுத்தப் படுவதோடு அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினார்.
இந்த தேர்தலில் போலீஸார் ஆக பள்ளியில் பயில கூடிய என்சிசி மாணவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்ற இந்தத் தேர்தல் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்ததுடன் எதிர்கால தலைமுறைக்கு தேர்தல் குறித்த ஒரு நல்ல வழிகாட்டுதலையும் ஏற்படுத்தியுள்ளது இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் ராஜசேகர், கிருஷ்ணமூர்த்தி, ஷீலா, ராஜலட்சுமி, மகேஸ்வரி
செந்தாமரை தேவி, ஜான் கென்னடி,அந்தோணி பீட்டர், இரத்தி பாய் லதா, இந்திரா ஆகியோர்கள் இதில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..