ஆம்பூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் பாலியல் பலாத்காரம் செய்து உடலை காட்டுப்பகுதியில் வீசி சென்ற நபர்கள் காவல்துறையினர் விசாரணை.....
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் காட்டுப்பகுதியில் சில கல்குவாரிகள் இயங்கி வருகின்றனர்....
வழக்கம் போல் கல்குவாரிக்கு வேலைக்கு சென்றவர்கள் காட்டுப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்து காட்டுப்பகுதியில் சென்று பார்த்த போது அங்கு பாறையின் அருகில் பெண் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக ஆம்பூர் கிராமிய காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்...
பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு அரசு மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை மேற்கொண்ட போது இறந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது...
பின்னர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டத்தில் இறந்த பெண் ஆம்பூர் அடுத்த சின்னகொம்பேஸ்வரம் பகுதியை சேர்ந்த சுமதி (30) என்பதும் இவர் ஆம்பூர் பகுதியில் தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததும் இவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது...
மேலும் இவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உடலை காட்டுபகுதியில் வீசி சென்ற நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்தி- கோவி. சரவணன்...