பேரணாம்பட்டு ஒன்றியத்தில் தெருக்களை தூய்மைப்படுத்தி , கிருமி நாசினிகள் தெளித்த இளைஞர்கள்...
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ளது ராஜக்கல் ஊராட்சி. இந்த ஊராட்சியில் ராஜக்கல் , ரெட்டிமாங்குப்பம் , கொத்தக்குப்பம் ,மேல் கொத்தக்குப்பம் , கூத்தாண்டவர் நகர், பன்னீர்குட்டை ,ஒட்டர் பாளையம் , சங்கராபுரம் என 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்நிலையில்
இராஜக்கல் ஊராட்சிக்குட்பட்ட மேல் கொத்த குப்பம் கிராமத்தில் இளைஞர்களால் வேப்பிலை, மஞ்சள் கரைசல் , கிருமி நாசினி கலவைகளை தயார் செய்தனர்.பின்னர் அந்த கிருமி நாசினிகள் நிரப்பப்பட்ட கேன்களை வாகனங்களில் ஏற்றி கொண்டு ஊர் முழுக்க தெளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...