மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை பிறகு நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி.. எனக்கு ஒரு விஷயத்தில் ஏமாற்றமாக உள்ளது...
கட்சி தொடங்குவது பற்றி ஓராண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினேன்; எனக்கு ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை; ஏமாற்றமே உள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
அரசியல் கட்சி தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த், இன்று சென்னையில் தனது ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் நீடித்தது.
ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசியல் கட்சி தொடங்குவது பற்றி ஓராண்டுக்கு பிறகு, தற்போது மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினேன். அரசியல் நிலவரம் பற்றியும் ஆலோசனைகளையும் கேட்டேன்.
எனக்கு நிறைய கேள்விகள் இருந்தன; அதுகுறித்த பதில்களை கேட்டு தெரிந்து கொண்டேன். மாவட்ட நிர்வாகிகளுக்கு எல்லாம் திருப்தி, ஆனால் ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தி இல்லை எனக்கு ஏமாற்றம் தான். நேரம் வரும் போது, அது என்னவென்று தெரிவிக்கிறேன். கமலுடன் கூட்டணி அமைத்து களம் காண்பது பற்றி காலம் தான் பதில் சொல்லும்.
சி.ஏ.ஏ. விவகாரத்தில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருடன் பேச்சு நடத்துமாரு இஸ்லாமிய அமைப்பினருக்கு கூறினேன். இஸ்லாம் மத குருமார்களுடனான சந்திப்பு இனிமையான சந்திப்பு. சகோதரத்துவம், அன்பு, அமைதி நிலவ வேண்டும். அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறோம்; நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார்கள். நான் அதற்கு என்னால் முடிந்த அளவிற்கு உதவுவதாக கூறினேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்தி- கோவி. சரவணன்...