திருப்பத்தூர் அடுத்த அனேரி கிராம் முழுவதும் கொரோனா வைரஸ் ஒழிக்க டிராக்டர் மூலம் கிருமி நாசினி தெளித்த பாமகவின் மாநில அமைப்பு செயலாளரும் தொழிலதிபருக்கு குவியும் பாராட்டுக்கள்...
உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொடிய வைரசயான கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது பல நாடுகளில் பரவியுள்ளது. இதனை தடுக்கும் வகையில் இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில். தமிழக அரசும் பல்வேறு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அரசுக்கு ஆதரவாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் தாங்கள் பங்குக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அனேரி கிராமத்தில் உள்ள தொழிலதிபரும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் ஏ.பி.சிவா பல்வேறு சமூக சேவைகள் செய்துவருகிறார். தற்போது மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய வைரசயான கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் மஞ்சள், வேப்பிலை, கிருமி நாசினி பவுடர்களை ஒன்றாக கலந்து கிராமம் முழுவதும் தெருக்களில் தெளித்து வருகிறார். குறிப்பாக அரசு பள்ளி வளாகம், கோயில்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் இந்த கிருமி நாசினயை டிராக்டர் மூலம் தெளித்து வருகிறார். இவரின் இந்த செயலை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இவர் ஏற்கனவே அனேரி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளை தத்தெடுத்து பராமரிப்பு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...