திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்..
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்தில் கந்திலி தொடக்க வேளாண்மை நிலவள வங்கி செயல்பட்டு வருகிறது.இந்த வங்கியின் தேர்தல் சுமார் நான்காவது முறையாக ரத்து செய்யப்பட்ட்டுள்ளது. இதன் அடிப்படையில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றார்
நான்காவது முறை தேர்தல் ரத்தான காரணத்தை கேட்க இணைப்பதிவாளர் முனிராஜ் அலுவலகத்தில் சென்று பார்த்த போது அவர் இல்லாத காரணத்தினாலூம் பலமுறை அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பயனில்லை எனக் கூறி திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் திமுக நிர்வாகிகள் திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு இணை அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் கூறிய சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி
கந்திலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு நிலவள வங்கியில் நடைபெறவிருந்த தேர்தல் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மூலம் அறிவிக்கப்பட்டும் நான்காவது முறையாக அதிமுக ஆட்சியின் கைக்கூலியாக செயல்படும் கூட்டுறவு சார்ந்த அலுவலர்கள் இரவோடு இரவாக தேர்தலை ஜாதி ரீதியான கலவரம் நடைபெறும் என கூறி நோட்டீஸ் ஒட்டி தேர்தலை ரத்து செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி தேர்தலை மக்கள் சந்திக்க கூடாது என்ற நோக்கிலேயே இந்த ஆட்சி அமைத்து வருகிறது எனவும் குற்றம் சாட்டினார். இந்த ஆர்பாட்டத்தில் கந்திலி ஒன்றிய செயலாளர் அன்பழகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜா, நிர்வாகிகள் மன்னன் மெடிக்கல் சக்கரவர்த்தி, கருணாநிதி, அன்பு, உட்பட திமுகவினர் கலந்துகொண்டனர்...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்தி- கோவி.சரவணன்...