திருப்பத்தூர் அருகே கோழி பிடிக்க சென்றவர் கிணற்றில்.. தப்பியது கோழி.. இளைஞர் படுகாயம்...
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புளனேரி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி மகன் சீனு (33) இவர் திருப்பத்தூர் அடுத்த பூரிமாணிக்கமிட்ட என்ற பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது திருப்பத்தூர் சப் கலெக்டர் பங்களா அருகிலுள்ள ஆசிரமம் பகுதியில் உள்ள சகுந்தலா என்பவர் தனது வீட்டில் வளர்க்கும் கோழி அருகிலுள்ள 90 அடி கிணற்றில் தீடீரென விழுந்து விட்டது. இதை பார்த்த சகுந்தலா அருகில் இருந்த தனது உறவினர்களிடம் கேட்டுள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் சீனுவை அழைத்து கிணற்றில் உள்ள கோழியை மீட்க்க கேட்டுள்ளார். இதையடுத்து சீனு அந்த தண்ணீர் இல்லாத 90 அடி ஆழம் உள்ள கிணற்றில் கயிறு கட்டி இறங்கியுள்ளார். அப்போது திடீரென்று கயிறு அறுந்து கிணற்றில் விழுந்து படுகாயம் அடைந்தார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க்கு முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை இதையடுத்து திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் சீனுவை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். கடும் முயற்சிக்கு பிறகு சீனு பத்திரமாக மீட்கப்பட்டார். அவருக்கு தலையில் லேசான காயமும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது உறவினர் வீட்டிற்கு விருந்தாளியாக வந்த நபரை கோழி பிடிக்க விட்டு அவர் கிணற்றில் விழுந்து படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் மற்றும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கோழியோ இன்று நாம் உயிர் பிழைத்தோம் என்ற மகிழ்ச்சியில் பறந்து சென்றது...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்தி- கோவி.சரவணன்...