கொரோனா வைரஸ் காரணமாக சென்னை ஐகோர்ட் மற்றும் ஐகோர்ட் மதுரை கிளைகளில் நாளை முதல் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணை...
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக ஐகோர்ட்டில் மக்கள் கூட்டம் அதிகம் கூடுவதை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் வக்கீல் சங்க நிர்வாகிகள் முறையிட்டனர்.
இதையடுத்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுப்பையா, எம்.சத்தியநாராயணன், என்.கிருபாகரன், எம்.எம். சுந்தரேஷ், டி.எஸ்.சிவஞானம், வக்கீல் சங்க நிர்வாகிகள் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், ஜி.மோகனகிருஷ்ணன், ஆர்.சுதா, கிருஷ்ணகுமார், லூயிஸ்சால் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது ஜாமீன், முன்ஜாமீன் உள்ளிட்ட அவசர வழக்குகள் மட்டுமே நாளை முதல் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும். அதுவும் முக்கிய வழக்குகளை ஒரே நீதிபதி விசாரிப்பதற்கு பதில் பல நீதிபதிகளுக்கு வழக்குகளை பிரித்து கொடுத்து விரைவாக விசாரித்து முடிக்கப்படும்.
பொதுமக்கள், அரசு அதிகாரிகளை தேவையில்லாமல் ஐகோர்ட்டுக்குள் அனுமதிக்கூடாது. கோர்ட்டு அறைகளில் கூட்டம் அதிகம் இருக்க கூடாது என்பது உள்பட பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான உத்தரவு இன்று மாலையில் ஐகோர்ட்டு பிறப்பிக்க உள்ளது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்....