தமிழக-கர்நாடக எல்லை பகுதிகளில் பொது சுகாதாரத்துறை சார்பில் கொரோனோ வைரஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லைப்பகுதியான வெலதிகாமணி பெண்டா மற்றும் தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான நாட்றம்பள்ளி காந்திநகர் தொட்டி கிணறு, சின்ன கந்திலி உள்ளிட்ட நான்கு இடங்களில் பொது சுகாதாரத்துறை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையிலான மருத்துவ குழுவினர் மற்றும் காவல்துறையினர் கொரோனோ நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் கிருமிநாசினி (டைசால்) நோய் தடுப்பு மருந்து தெளிக்கபட்டது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்தி- கோவி. சரவணன்...