திருப்பத்தூரில் மேளதாளத்துடன் திரெளபதி படம் பார்க்க சென்ற பெண்கள்...
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அனேரி பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் ஏ.பி.சிவா. இவர் சமூக ஆர்வலராக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். குறிப்பாக திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்துவருகிறார். குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி அவர்களின் திறமைகளை வெளியுலகிற்கு அறிமுகம் படுத்தி வருகிறார். இந்நிலையில் பெண் குழந்தைகள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன் திரையிடப்பட்ட திரெளபதி என்ற திரைப்படத்தை கிராம பகுதிகளில் உள்ள பெண்கள் மற்றும் கல்லுரி, பள்ளி செல்லும் மாணவர்கள் பார்க்கும் வகையில் தொழிலதிபர் ஏ.பி.சிவா ஏற்பாட்டில் திருப்பத்தூர் நகரில் திரையிடப்பட்ட கலைமகள் திரையரங்கில் படம் பார்க்க 150க்கும் மேற்பட்ட பெண்களை மேளதாளத்துடன் அழைத்து வந்து அவர்களுக்கு திரெளபதி திரைபடம் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி.சரவணன்..