தமிழ் திரைப்பட உலகின் புகழ்பெற்ற வில்லன், குணசித்திர நடிகர் எம்.என்.நம்பியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
1919-ல் மார்ச் 7 அன்று கேரளாவில் கண்ணூரில்த் பிறந்தார்.
இவரது சிறு வயதில் தந்தை இறந்துவிட தன் அக்காவுடன் ஊட்டிக்குப் போனார். அங்கே நாடகத்தில் ஆர்வம் கொண்டு நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை குழுவில் சேர்ந்தார்.
1935-ல் பக்த ராமதாஸ் என்ற திரைப்படத்தில் டி.எஸ்.சாரங்கபாணியுடன் சிரிப்பு நடிகராக அறிமுகமானார்.
தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என்று பல மொழிகளில் சேர்த்து 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
திரையில் கொடூர வில்லனாக வலம் வந்த நம்பியார் நிஜ வாழ்வில் அதற்கு நேர் மாறானவர்.
சுத்த சைவர். அதிலும் தன் மனைவி சமையல் தவிர வேறெதுவும் சாப்பிட மாட்டார்.
கெட்ட பழக்கங்கள் என்று எதுவும் இல்லாது வாழ்ந்தார். சபரிமலைக்கு மாலையிட்டு ஒவ்வொரு வருடமும் செல்வார்.
65 ஆண்டுகள் தொடர்ந்து சென்று வந்தார். அவர் இறந்த பின் சபரிமலையில் அவருக்கு நினைவு இடம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நடிகருக்கு சபரிமலையில் நினைவு இடம் அமைக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
தமிழ் சுடரில் வரும் வரலாற்று சுடர்...