தமிழ்நாட்டில் அடுத்த முதல்வர் தான் நடிகர்  வடிவேல் நக்கல்..

தமிழ்நாட்டில் அடுத்த முதல்வர் தான் நடிகர்  வடிவேல் நக்கல்..


கட்சிக்கு ஒருவர், ஆட்சிக்கு ஒருவர் என்று  நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று, நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.


நடிகர் ரஜினிகாந்த் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தனது அரசியல் திட்டத்தை அறிவித்தாரே தவிர, கட்சி தொடங்கும் நாள் குறித்தோ, அரசியலுக்கு வருவது குறித்த உறுதியான அறிவிப்பையோ வெளியிடவில்லை.


இதனால், அவரது ரசிகர்கள் வழக்கம் போல் ஏமாற்றமடைந்துள்ளனர். ரஜினி நேற்று வெளியிட்ட அரசியல் திட்டத்திற்கு வரவேற்பும், எதிர்ப்பும் கலந்து சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், நடிகர் ரஜினியின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பு குறித்து நடிகர் வடிவேலு, தனக்கே உரிய பாணியில் விமர்சனம் செய்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வந்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


நடிகர் ரஜினிகாந்த்  அரசியல் கட்சி தொடங்குவாரா என்பது அவருக்கும் தெரியாது, நமக்கும் தெரியாது. அவர் வரும்போது பார்த்துக்கொள்வோம்  கட்சிக்கு ஒருவர், ஆட்சிக்கு ஒருவர் என்ற ரஜினியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.


நான் கூடத்தான் முதல்வராக வேண்டுமென்று  நினைக்கிறேன். வரும் 2021ல் நான் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்று நகைச்சுவையுடன் வடிவேலு குறிப்பிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..


செய்தி- கோவி.சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image