வாணியம்பாடி அருகே மலை கிராம மக்களுக்கு நடைபயணமாக சென்று மருத்துவம் பார்த்த குழு...
இந்தியா சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் கடந்தும் இதுவரை சாலை வசதி இல்லாத மலை கிராமம் ஒன்று உள்ளது என்றால் அது எங்கும் இல்லை நமது தமிழ் நாட்டில் அதுவும் உலக புகழ் பெற்ற நமது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ளது என்பது மிகவும் வருத்தமாக உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் நெக்கனாமலை மலை கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளுக்காக தினமும் 8 கிலோமீட்டர் தூரம் கரடுமுரடு பாதைகளை கடந்து வந்து செல்லும் அவலநிலை உள்ள மக்களுக்கு மருத்துவம் பார்க்க வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் இஸ்லாமிய கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம் அரசு மருத்துவர் செந்தில்குமார் தலைமையில் மருத்துவர் குழு நெக்கனாமலை கிராமத்திற்கு மருந்து மற்றும் நோய் தடுப்பு பொருட்களை எடுத்து சென்று சிறப்பு மருத்துவ முகாமில் அங்குள்ள மக்களுக்கு சிகிச்சை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி. சரவணன்...