ஆம்பூர் அருகே வீட்டில் முடங்கிக் கிடந்த மக்களுக்கு உதவி செய்த ஊராட்சி மன்ற தலைவருக்கு குவியும் பாராட்டு...

ஆம்பூர் அருகே வீட்டில் முடங்கிக் கிடந்த மக்களுக்கு அரிசி முட்டைகள் வழங்கிய  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு குவியும் பாராட்டு...


அகில உலகத்தையும் தற்போது ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கும்   கொரோனா என்ற   வைரஸ் தற்போது நமது பாரத நாட்டில் இரண்டாம் கட்ட நிலையில் இருப்பதால் அதனை கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொதுமக்களின் நலன்கருதி   நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த  சின்னவரிகம் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பாஸ்கரன் என்பவர்  தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு   அரிசி மூட்டைகள் வழங்க முடிவு செய்தார். அதன்படி  300க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சென்று  அரிசி மூட்டைகளை  வழங்கினார். இந்த சமூக சேவை பணியில்  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காசிவிசுவநாதன்  மற்றும் கௌதமிசந்திரன் , பாரத் ,அரவிந்த்குமார் , சுப்பிரமணி மற்றும் குமார் ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது... தற்போது மக்கள் தாங்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் இந்த வேலையில் அவர்களின் கஷ்டங்களை அறிந்து சரியான நேரத்தில் சரியான உதவி செய்த நபர்களுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இவர்களின் செயல் வெகுவாக பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image