ஆம்பூர் அருகே  வனப்பகுதியில்  தீ விபத்து.  மூன்று மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த வனத்துறையினர்...

ஆம்பூர் அருகே  வனப்பகுதியில்  தீ விபத்து.  மூன்று மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த வனத்துறையினர்...


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த  மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி அருகேயுள்ள  பிக்கலமலை, பெங்கலமூலை போன்ற   வனப்பகுதிகளில்  சமூக விரோதிகள் அடிக்கடி வனப்பகுதியில் உள்ள விலைமதிப்பற்ற மரங்களுக்கு தீ வைத்துவிட்டு தலைமறைவாக சென்றுவிடுகின்றனர்.  இந்நிலையில் மீண்டும் அஃதே பகுதியில் மர்மம் நபர்கள் வனப்பகுதிக்கு தீ வைத்துள்ளனர். இந்த தீ மலமல என வனப்பகுதி முழுவதும் பரவியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள்   தீ விபத்து குறித்து  ஆம்பூர் வனச்சரகர் மூர்த்திக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் வனசரகர் மூர்த்தி தலைமையில் வனக்காப்பாளர்கள் விஸ்வநாதன் ,நிர்மல், ராமு, மகேஷ், ரமேஷ்குமார், எம். ராஜ்குமார் ,வி.ராஜ்குமார் ,கணேசன் ,முனிசாமி  வனக்காவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஞானவேல் , அசன் நிசாருதீன், முகம்மது சுல்தான், சக்திகுமார் மற்றும் சக்தி ஆகியோர் சுமார்  3 மணி நேரமாக  போராடி பிக்கலமலை,கொண்டப்பட்டியான் சுனை, பெங்கலமூலை போன்ற பகுதிகளில்   காட்டுத் தீயை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image