திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக காய் மார்க்கெட் காவல்துறை மற்றும் மருத்துவத் துறை கண்காணிப்பில் விற்பனை...

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக காய் மார்க்கெட் காவல்துறை மற்றும் மருத்துவத் துறை கண்காணிப்பில் விற்பனை...


உலகம் முழுவதும் தனது அசுர பலத்தால் ஆட்டிக் கொண்டிருக்கும் கொரோனா  வைரஸ் தற்போது இந்தியாவில் இரண்டாம் கட்ட நிலையில் இருப்பதால் அதனை தடுக்கும் நோக்கில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களின் அன்றாட தேவைகளை கருத்தில் கொண்டு மக்களின் தேவைகளுக்காக தினசரி காலை 6 மணி முதல் காலை 10 மணிவரை தமிழகம் முழுவதும் அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக காய்கறிகள் மார்கெட் அமைக்க மாவட்ட ஆட்சியர் சிவனருள் உத்தரவின் பேரில்  அமைக்கப்பட்டது. இன்று காலை திறக்கப்பட்ட காய்கறி மார்க்கெட்டை மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்  காய்கறிகள் விற்பனை செய்யும் இடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். 


பொது மக்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர்..


தற்பொழுது பரவிவரும் கொரோனா  வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் சாலைகளிலும் தெருக்களிலும் சர்வ சாதாரணமாக சுற்றிதிரிகிறார்கள். இந்த வைரஸின் தாக்கத்தை அறிந்து பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு தங்களை  பணிந்து வேண்டி கேட்டுக்கொள்கிறேன். அன்றாட தேவைகளான காய்கறி மற்றும் பால்,  மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். அதுவும் அரசாங்கம் ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் மட்டுமே வெளியில் வந்து தங்கள் தேவைகளை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் மற்ற நேரங்களில் தேவையில்லாமல் வெளியில் சுற்ற வேண்டாம் என தங்களை கேட்டுக்கொள்கிறேன். அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு பொது மக்களாகிய நீங்களும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து  இன்றைய காய்கறி மார்க்கெட் 10 மணி அளவில் மூடப்பட்டது. நாளை காலை 4 மணி முதல் 10 மணி வரை மட்டுமே காய்கறி மார்க்கெட் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள். 


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image