ஏலகிரி மலையில் மூன்று தலைமுறைகளாக குடியிருக்கும் மலைவாழ் மக்களுக்கு மாற்று இடம் தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மழைக்கு ஆந்திரா கர்நாடகா கேரளா மற்றும் தமிழகத்திலுள்ள பகுதியிலிருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளது. தற்பொழுது புதிய மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக ஏலகிரி மழையை உருவாக்கும் வகையில் ஏலகிரி மலையில் உள்ள பள்ளிக்கனியூர், நிலாவூர், கோட்டூர் போன்ற கிராமங்களுக்கு மத்தியில் அரசுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தில் மாநில சுற்றுலாத் துறை சார்பில் தாவரவியல் பூங்கா அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான இடம் தேர்வு கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் ஆய்வை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அந்த பகுதியில் 15-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மூன்று தலைமுறையாக கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். அந்த பகுதியில் விவசாயம் செய்தும் வந்துள்ளனர். இந்நிலையில் தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அரசாங்கம் சார்பில் தாவரவியல் பூங்கா வருவதால் தங்களுக்கு மாற்று ஏற்பாடும் மற்றும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அதற்கு ஒரு மாற்று வழிவகை செய்து தரக்கோரி இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பள்ளக்கனியூர்,நிலாவூர், கோட்டூர் போன்ற பகுதிகளில் குடியிருக்கும் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் சிவனருளிடம் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்.
உங்கள் பகுதியில் மாநில சுற்றுலாத்துறை சார்பில் தாவரவியல் பூங்கா அமைக்க ஏற்கனவே அந்த இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதால். வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய தற்போது வழிவகை இல்லை. உங்களுக்கு மாற்று இடம் அரசாங்கம் சார்பில் வழங்கப்படும். உங்களுக்கு அரசாங்கம் சார்பில் இலவச வீடு கட்டிக் கொடுக்கப்படும். தாவரவியல் பூங்கா அமைய உள்ள பகுதியில் பாதிக்கப்படும் குடும்பத்தினருக்கு நிரந்தர வேலை வாய்ப்பை தமிழக அரசு செய்து தரும் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு நல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்தார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்தி- கோவி. சரவணன்...