இன்றைய (14-03-2020) ராசி பலன்கள்பலன்கள்*
மேஷம்
செயல்பாடுகளில் சுறுசுறுப்பு இல்லாமல் செயல்படுவீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் தடை, தாமதநிலை ஏற்படும். அலட்சிய எண்ணங்களால் எதிர்பாராத வீண் பிரச்சனைகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அஸ்வினி : சோர்வான நாள்.
பரணி : தடைகள் ஏற்படும்.
கிருத்திகை : நிதானம் வேண்டும்.
---------------------------------------
ரிஷபம்
உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் உருவாகும். நெருக்கமானவர்களோடு இருந்த பிரச்சனைகள் குறையும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். அறிமுகம் இல்லாத புதிய நபர்களிடம் அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : சேமிப்பு அதிகரிக்கும்.
ரோகிணி : பிரச்சனைகள் குறையும்.
மிருகசீரிஷம் : அமைதி வேண்டும்
---------------------------------------
மிதுனம்
குடும்பத்தில் அமைதி நிலவும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். பொதுக்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். திட்டமிட்ட காரியத்தில் எதிர்பாராத மாற்றம் உண்டாகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கணவன், மனைவி உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : விருப்பங்கள் நிறைவேறும்.
திருவாதிரை : எண்ணங்கள் மேலோங்கும்.
புனர்பூசம் : மகிழ்ச்சி அதிகரிக்கும்.
---------------------------------------
கடகம்
பயணங்களால் அலைச்சலும், சோர்வும் ஏற்படும். மாணவர்களுக்கு ஞாபகமறதி தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் இருந்துவந்த பயம், பதற்றம் நீங்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை மனமகிழ்ச்சியை அளிக்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.
பூசம் : பதற்றம் நீங்கும்.
ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்
வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். அனுபவ அறிவால் முன்னேற்றமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களுக்கு ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பணி சம்பந்தமான புதிய பொறுப்புகள் கிடைக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மகம் : அனுபவம் உண்டாகும்.
பூரம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திரம் : பொறுப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
கன்னி
எண்ணிய செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பணியில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவும், வழிகாட்டுதலும் கிடைக்கும். புதிய தொழில் தொடர்பான முயற்சிகள் வெற்றியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : துரிதம் உண்டாகும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : அறிமுகம் கிடைக்கும்.
---------------------------------------
துலாம்
அறிமுகம் இல்லாத நபர்களால் சில சங்கடங்கள் உருவாகலாம். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் எண்ணிய வெற்றியை தரும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளால் விரயங்கள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
சித்திரை : வெற்றி உண்டாகும்.
சுவாதி : நன்மை ஏற்படும்.
விசாகம் : விரயங்கள் உண்டாகும்.
---------------------------------------
விருச்சகம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரம் தொடர்பான சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : ஆதாயம் உண்டாகும்.
கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தாய் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : சவாலான நாள்.
பூராடம் : மனக்கசப்புகள் குறையும்.
உத்திராடம் : எதிர்ப்புகள் நீங்கும்.
---------------------------------------
மகரம்
விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழல் உண்டாகும். கொடுக்கல் - வாங்கல்கள் தொடர்பான பிரச்சனைகள் சீராகும். எண்ணிய காரியங்கள் எண்ணிய விதத்தில் நடைபெறும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம் -பக்கம் வீட்டாரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : பிரச்சனைகள் சீராகும்.
திருவோணம் : வசதிகள் மேம்படும்.
அவிட்டம் : வேறுபாடுகள் குறையும்.
---------------------------------------
கும்பம்
உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத தனவரவு சாதகமாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மேலோங்கும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
சதயம் : சாதகமான நாள்.
பூரட்டாதி : தனவரவு கிடைக்கும்.
---------------------------------------
மீனம்
வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் எதிர்பார்த்த பலனை அளிக்கும். வீண் அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். குடும்பத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திரட்டாதி : மனச்சோர்வு உண்டாகும்.
ரேவதி : நம்பிக்கை அதிகரிக்கும்.
--------------------------
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..